பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

161

அணுக்களாகப் பிரித்திராமல் நாம் பார்க்கும் வஸ்துக்களாகக் காணப்படுகின்றன. அவ்விதம் சேர்ந்திருக்கும் ஆசை திரவ வஸ்துக்களிடம் குறைவாகும். அதனால்தான் ஜலம் போன்ற திரவ வஸ்துக்கள் சுலபமாகப் பிரிக்க இடம் தருகின்றன; ஒட்டுத் தாள் போன்ற வஸ்துக்களின் ஊறி விடுகின்றன. பாதரசமும் திரவ வஸ்துதான். ஆனால் சேர்ந்திருக்கும் ஆசை மற்ற திரவ வஸ்துக்களுக்கு உள்ளதைவிட பாதரசத்துக்கு அதிகம். அதனால்தான் அது ஜலம்போல் ஓடாமலும் ஊறாமலும் பந்துகள்போல் உருள்கிறது.

247 அப்பா! கண்ணாடியைக் கத்தியால் நறுக்க முடியவில்லையே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கண்ணாடி கடுதாசிபோல் மென்மையான வஸ்துவன்று. கடினமாயிருக்கிறது. அதனால்தான் கத்தியால் நறுக்க முடியாது. ஆயினும் படக் கடையில் கண்ணாடியை நறுக்குவதைப் பார்த்திருப்பாய், அவர்கள் கண்ணாடியை கத்தியால் நறுக்குலதில்லை. வைர ஊசியால் நறுக்குகிறார்கள். அந்த வைரம் நகைகளுக்கு உபயோகிக்கும் வைரமன்று. கறுப்பு தினுசான வைரம் இருக்கிறது. அதைத்தான் கண்ணாடியை நறுக்குவதற்கும். நவரத்னங்களைத் தேய்ப்பதற்கும், பாறைகளைத் துளைப்பதற்கும்,உபயோகிக்கிறார்கள். தம்பி! வைரத்தைப்போல் அதிக கடினமான வஸ்து உலகில் கிடையாது. அதைக் கொண்டு எந்த வஸ்துவையும் கீற முடியும், அதில் எவ்விதக் கீறலும் உண்டாக்க முடியாது. அதனால்தான் வைர ஊசியைக்கொண்டு கண்ணாடியை அவ்வளவு சுலபமாக நறுக்கி விடுவார்கள்.

248 அப்பா! ரூபாயின் ஒரத்தில் மட்டும் வரிவரியாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், ரூபாயின் ஓரத்திலும் பவுனின் ஓரத்திலும் வரி வரியாக இருக்கிறது. மற்ற தாணயங்களில் அப்படி

கு-11