பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கேள்வியும் பதிலும்

1 அப்பா! வானம் நீலமாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! பகலில் சூரிய வெளிச்சம் தெரிகிறது. அப்பொழுதுதான் வானம் நீல நிறமாய்த் தெரிகிறது. இரவில் இருட்டாயிருக்கிறது; அப்பொழுது வானம் கறுப்பாகவே தெரிகிறது. ஆனல் சூரிய வெளிச்சம் வெள்ளை நிறமாயிற்றே, அப்படியிருக்க வானம் நீல நிறமாய்த் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

காரணம் வெகு காலமாகத் தெரியாமல் இருந்தது.

சென்ற நூற்றாண்டில்தான் ஜான் டிண்டல் என்னும் அறிஞர் காரணத்தைக் கண்டு சொன்னார். நமக்கும் வானத்துக்கும் இடையே எங்கும் தூசி மயமாய் இருக்கிறது. சூரிய ஒளியில் ஏழு நிறக் கிரணங்கள் இருக்கின்றன. அவற்றில் நீலநிறக்

கிரணங்களைத் தவிர இதர நிறக் கிரணங்களை எல்லாம் அந்தத் தூசிகள் கிரகித்துக்கொண்டு, நீலநிறக் கிரணங்களை மட்டும் நம்மிடம் அனுப்புகின்றன. அதனால் தான் வானம் நீலமாகத் தெரிகிறது. காற்றில் தூசிகள்

கு-1