பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

3

அதிக உயரத்தில் இல்லை. ஐம்பது அறுபது மைல் தூரத்தில் தான் இருக்கிறது.

தம்பி! இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் தோன்றுகிறதே, அந்த வானம் வேறு. இரவில் வானம் நீலமாகத் தோன்றவில்லை; சூரிய வெளிச்சம் இருந்தால்தானே நீலமாகத் தோன்றும்? பகலில் காற்று நீலமாய்த் தோன்றுவதால் காற்றுக்கு அப்புறம் சூரியனையும் சந்திரனையும் தான் பார்க்க முடிகிறது; நட்சத்திரங்களைப் பார்க்கமுடியவில்லை. ஆனால் இரவிலோ காற்றுக்கு அப்புறம் வெகு துாரத்திலுள்ள நட்சத்திரங்களும் கண்ணுக்குப் புலனாகின்றன. அப்படி நட்சத்திரங்கள் தோன்றும் வானமும் ஒரு வஸ்துவன்று. வெறும் வெட்டவெளிதான்.

4 அப்பா! வானம் தெரிகிறதே, அதற்கு அப்பால் என்ன இருக்கிறது?

தம்பி! வானம் என்று ஒரு வஸ்து கிடையாது, நம்முடைய பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் இருக்கிறது. அது இருநூறு மைல் தூரம்வரை இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். சூரியனுடைய ஒளி அந்த காற்று மண்டலத்தின் வழியாக வரும்பொழுது அதிலுள்ள துாசிகள் ஒளியின் இதர நிறக் கதிர்களைக் கிரகித்துக்கொண்டு நீல நிறக் கதிர்களை மட்டும் நமக்கு அனுப்புகின்றன. அதனால் தான் வானம் இருப்பது போலவும் அது நீலமாயிருப்பது போலவும் தோன்றுகிறது. ஆனால் இரவிலோ சூரிய வெளிச்சமில்லை. அதனால் நட்சத்திரங்களுக்கு இடையில் நீலவானம் தெரியவில்லை. அதற்குப் பதிலாக இருளே தெரிகிறது. அந்த இருள் வெளியில்தான் நட்சத்திரங்கள் எல்லாம் வாழ்ந்து வருகின்றன. ஆதலால் வானம் என்றும் வானத்துக்கு அப்பால் என்றும் கூறுவதில் பொருள் இல்லை.