பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கேள்வியும்

தூரத்திலிருந்து வருகிற, கப்பலைக் கவனித்தால், பூமி தட்டையாய் இருக்க முடியாது, உருண்டையாகந்தான் இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். முதலில் நமக்குப் புகைதான் தெரியும், அதன் பின்னர் பாய் மரத்தின் உச்சி தெரியும். கபபல் ஏதோ ஒரு மலையில் ஏறிவருவது போலத் தோன்றும். அதன் பின்னர் அடிப்பாகம் தெரியும். ஆனால் பூமி தட்டையாக இருந்தால் முதலிலேயே கப்பல் முழுவதும் தெரிந்து விடும். ஆதலால் பூமி உருண்டைதான் என்பதில் சந்தேகமில்லை.

அதுவும் தவிர, ஏதேனும் ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு, எந்தச் திசையை நோக்கிப் புறப்படுகிறோமோ அந்தத் திசையை நோக்கியே போய்க்கொண்டிருந்தால், புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்து விடலாம். இதுவும் பூமி உருண்டைதான் என்பதைக் காட்டும்.

42 அப்பா! பூமி உருண்டை என்றால் அடுத்த பக்கம் வரை துவாரம் செய்து அந்தப் பக்கம் போய் விழும்படி ஒரு கல்லைப் போட்டு விடலாமோ?

தம்பி! இந்தப் பக்கத்திலிருத்து அந்தப் பக்கம் வரை 8000 மைல் துாரம் இருக்கிறது. ஆனால் இந்தப் பக்கம் 40 மைல் துாரமும் அந்தப் பக்கம் 40 மைல் துாரமும் தான் மண்ணும் கல்லும் சேர்ந்து கட்டியான தரை உண்டு. இடையில் எல்லாம் இளகிக் குழம்பாகவே இருக்கும். அதனால் நீ சொல்லுகிறபடி துவாரம் செய்ய முடியாது. அப்படி ஒரு துவாரம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் போடுகிற கல் போகும் வழியிலேயே இளகி வாயுக்களாக எரிந்து போகும். அப்படி எரிந்து விடாமல் போவதாக வைத்துக் கொண்டாலும் அது அடுத்த பக்கம் போய்ச் சேராது. பூமியின் ஆகர்ஷ்னை சக்தி அதை உள்ளே போகப் போக அதிகமாய் இழுப்பதால் அது அதிக விரைவாகப் போகும். அந்த வேகத்தில் அது பூமியின் மத்தியைக் கடந்துவிடும். அதனால்