பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கேள்வியும்

குறைவாயிருக்கும். அதனால் மேலே கிளம்பிச் செல்கிறது. அங்கே குளிர்ந்த காற்று படுமானால் சிறு சிறு துளிகளாக மாறுகிறது. அந்த ஜலத் துளித் தொகுதிகளைத்தான் மேகங்கள் என்று கூறுகிறோம். அப்படி மேலே செல்லும் நீராவி குளிர்ந்த காற்றைச் சந்திக்காவிட்டால் ஆவியாகவே இருந்துவிடும். அப்பொழுது அது நமக்கு மேகமாகத் தோன்றாது. காற்றோடு காற்றாகத்தான் நிற்கும். அப்படி நீராவி எப்பொழுதும் காற்றில் காணப்படாவிட்டால் சூரியனுடைய உஷ்ணம் நம்மால் தாங்க முடியாமல் இருக்கும். நீராவிதான் சூரியனுடைய உஷ்ணத்தில் பெரும் பாகத்தைக் கிரகித்துக் கொள்கிறது. இல்லையானால் நாம் பொசுங்கிப் போவோம்.

52 அப்பா! மழை தாரையாக இறங்காமல் துளிகளாகவே இறங்குகின்றது. அந்தத் துளிகளும் சில சமயம் சிறியவையாயும் சில சமயம் பெரியவையாயும் இருக்கின்றன, அதற்குக் காரணம் என்ன?

நீராவி ஜலமாக மாறினால், அது மொத்தமாக மாற வேண்டிதுதானே என்று கேட்கிருய். அது நியாயம்தான். ஆனால் நீராவி ஜலமாக மாறவேண்டுமானல் அது ஜலமாகப் படிய ஏதேனும் ஒரு கனவஸ்து அவசியம். அந்த வஸ்து சிறியதாயிருந்தாலும் சரி, பெரியதாயிருந்தாலும் சரி, அது வேண்டியது மட்டும் அத்தியாவசியமாகும். ஆகவே மேகத்திலுள்ள நீராவி தானாக பூமிக்கு வர முடியாது. சவாரி செய்து கொண்டுதான் வர முடியும். அப்படிச் சவாரி செய்வதற்கு ஏராளமான குதிரைகள் உள. காற்றிலுள்ள சிறு தூசிகள் தான் அந்தக் குதிரைகள். அதனால்தான் மழை தாரையாக விழாமல் துளிகளாக விழுகின்றன.

அந்தத் தூசிக் குதிரைகள் சிறியவைகளாக இருப்பதால் மழைத் துளிகளும் சாதாரணமாகச் சிறியவைகளாகவே