பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

51

71 அப்பா! பூமியின்மீது காற்று இருக்கிறதே, அதற்கு அப்பால்‌ இருப்பது என்ன?

தம்பி! அதற்கு அப்பால்‌ “ஈதர்‌” என்று ஒரு வஸ்து பாரவியிருப்பதாக அறிஞர்கள்‌ கூறுகிறார்கள்‌. அந்த ஈதர்‌ அங்குமட்டுமன்று, மற்றுமுள்ள இடத்திலுங்கூடப்‌ பரவியிருக்கிறதாம்‌. பிரபஞ்சத்தில்‌ அது இல்லாத இடம்‌ கிடையாதாம்‌. அவ்விதம்‌ சர்வ வியாபியாயுள்ள அந்த வஸ்து எப்படி இருக்கும்‌? அதைப்பற்றி யாருக்கும்‌ தெரி யாது. அதை நாம்‌ பார்க்க முடியாது. அதன்‌ மூலமாக சப்தம்‌ கேட்கவும்‌ செய்யாது. அதனால்‌ தான்‌ சூரிய சந்திரர்‌ முதலிய ஏனைய கே௱ளங்களில்‌ உண்டாகும் சப்தங்கள்‌ ஒன்றும்‌ நமக்குக்‌ கேட்பதில்லை. ஆனால்‌ அந்த ஈதர்‌ மூலமாக நாம்‌ பார்க்க முடியும்‌. அதனால்தான்‌ சூரிய சந்திரர்‌ நட்சத்திரங்கள்‌ இவற்றின்‌ ஒளி நம்மிடம்‌ வந்து சேருகிறது. நாம்‌ அவைகளைப் பார்க்க முடிகிறது. அது மட்டுமா? நாம்‌ உலகத்தில்‌ ஈதரைத்‌ தவிர வேறு ஒன்‌றுமே காண்பதில்லை என்று கூடக்‌ கூறிவிடலாம்‌. நாம்‌ வஸ்துக்களைப்‌ பார்ப்பதில்லை, வஸ்துக்களிலிருந்து வரும்‌ ஒளியைத்தான்‌ பார்க்கிறோம். அத்த ஓளி ஈதரின்‌ அசைவு தான்‌. இந்த அற்புதமான ஈதரின்‌ லட்சணத்தை அறிய அறிஞர்கள்‌ சதாகாலமும்‌ முயன்றுகொண்டிருக்கிறார்கள்‌.

72 அப்பா! நமக்கு மேலே வெகு தூரம்வரை காற்று மண்டலம்‌ இருப்பதாகக்‌ கூறுகிறார்களே, அது நம்மை அழுத்த வில்லையே, அதற்குக்‌ காரணம்‌ என்ன?

ஆமாம்‌, காற்று இருநூறு மைல்களுக்கு அதிகமாக இருக்கிறது. நாம்‌ ஒரு பெரிய காற்றுச்‌ சமுத்திரத்தின்‌ அடியில்தான் வசித்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. அவ்வளவு காற்றும்‌ நம்மை அழுத்தாதோ? காற்றானது ஒரு சதுர அங்குல இடத்தில்‌ 16 பவுண்டு நிறை வைத்ததுபோல அழுத்துவதாகக்‌ கூறுகிறார்கள்‌. உள்‌ளங்‌கையைத்‌