பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

71

ஏதேனும் புயல் வருவதாய் இருந்தால் அதன் ஆரம்பத்துக்கு முன்னும் அலைகள் இல்லாமல் இருக்கும்.

இவ்விதமாகக் கடலில் எப்போதும் அலைகள் காணப்படும் என்று கூறுவதெல்லாம் கடலின் மேற்பாகத்திலேயே, அதிகக் கொடூரமான புயற்காற்று வீசுங் காலத்தில் கூட கடலின் மேற்பரப்பிலிருந்து கொஞ்சதுாரம் கீழே சென்றால் அங்கே கடல் ஆடாமல் அசையாமல் அமைதியாய் இருப்பதைக் காணலாம்.

103 அப்பா! கடலில் அலைகளின் உச்சி வெண்மையாகத் தெரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

காற்று அலைகளை எவ்வளவு உயரமாக எழுப்ப முடியுமோ அவ்வளவு உயரமாக எழுப்ப முயல்கின்றது. ஆனால் ஜலம் உயரமான குவியலாக நிற்க முடியாது. அதனால் அலைகள் உடைந்து சிதறிச் சாய்ந்து விடுகின்றன. அப்பொழுது சிறிய குமிழிகள் உண்டாகின்றன. அவற்றில் சூரியனுடைய வெளிச்சம் பட்டதும் அவை வெள்ளை நுரையாய் அழகாகத் தோன்றுகின்றன.

104 அப்பா! கடல் ஐலம் உப்பாக இருக்கிறதே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கடலுக்கு ஜலம் மழையாலும் நதிகளாலும் தான் கிடைக்கிறது. மழை ஜலமும் நதி ஜலமும் உப்பாக இல்லை. அப்படியிருக்கக் கடல் ஜலம் உப்பாயிருக்க காரணம் என்ன? தம்பி! கடலுக்கு உப்பு, நதி ஜலம் மூலமாகத் தான் கிடைக்கிறது. நதிகள் போகும் வழியிலுள்ள நிலத்தைக் கரைத்துக்கொண்டு போகின்றன. நிலத்தில் பலவிதமான உப்புகள் உள.

ஆனால் நதி ஜலம் உப்பாக இல்லையே என்று கேட்பாய். நதியில் ஜலம் அதிகமாகவும் உப்பு குறைவாகவும் இருக்கிறது.