பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

75

மீது ஒளியே படாதிருந்தால்‌ அப்பொழுது கடலின்‌ நிறம் கறுப்புத்தான்‌. அவ்விதமாகத்தான்‌ நிலா இல்லாத இரவில்‌ தோன்றும்‌.

சாதாரணமாக வானத்தின்‌ நிறம்‌ நீலம்‌. அதனால்‌ அதைப்‌ பிரதிபிம்பிக்கும்‌ கடலும்‌ நீலமாய்த்‌ தோன்றும்‌. வானத்தின்‌ நிறம்‌ மாறினால்‌ கடலின்‌ நிறமும்‌ மாறும்‌.

ஆனால்‌ வானம்‌ ஒரு பொழுதும்‌ பச்சையாகத்‌ தெரிவதில்லையே, அப்படியிருந்தும்‌ கடல்‌ சில வேளைகளில்‌ பச்சையாகத்‌ தெரிகிறதே. அதற்குக்‌ காரணம்‌ என்ன? ஆழமாயிருக்கும்‌ இடத்தில்‌ ஒளி ஜலத்துக்குள்‌ செல்லாமல்‌ அப்படியே நமக்குத்‌ திரும்பி வந்து சேரும்‌. ஆஞல்‌ ஆழமில்லாத இடங்‌களில்‌ ஓனியானது உள்ளே சென்று திரும்பும்‌. அதனால்‌பச்சை நிறமாக மாறிப்போகிறது.

சில சமயங்களில்‌ ஒரே இடந்தானே நேரத்துக்கு நேரம்‌வேறு நிறமாய்த்‌ தெரியும்‌, அதன்‌ காரணம்‌ என்ன? கடலில்‌ எவ்வித மாறுதலும்‌ இல்லை. சூரியனுடைய ஒளி தான்‌ ஒரு நேரம்‌ செங்குத்தாகவும்‌ ஒரு தேரம்‌ சாய்வாகவும்‌ ஒரு நேரம்‌ மேகங்களின்‌ வழியாகவும்‌ வரும்‌. அதனால்‌ கடலின்‌ நிறம்‌ மாறி மாறித்‌ தோன்றும்‌.

111 அப்பா! கடலில்‌ எங்கேனும்‌ நல்ல ஜலம்‌ கிடைக்குமா?

தம்பி! அநேகமாகப்‌ பெரிய நதிகள்‌ கடலில்‌ வந்து சேருமிடங்களில்‌ எல்லாம்‌ நல்ல ஜலம்‌ கிடைச்கும்‌. அவ்‌விதம்‌ நல்ல ஜலம்‌ அநேக மைல்‌ தூரம்‌ வரை கூடக்‌ காணலாம்‌. தென்‌ அமெரிக்காவிலுள்ள அமசான்‌ நதிதான்‌ உலகில்‌ பெரிய நதி. அது கடலில்‌ சேருமிடத்தில்‌ 200 மைல்‌ தூரம்‌ வரை நல்ல ஜலம்‌ கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவின்‌ கீழக்கரைப்‌ பக்கம்‌ கடலில்‌ நல்ல ஜலம்‌ குமிழியிடுகிறது. மாலுமிகள்‌ வாளி போட்டு. இறைத்துக்‌ கொள்‌வார்கள்.