பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

77


114 அப்பா! கடல் ஜலத்தில் நீந்துவது சுலபம் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஒரு கன அடி அளவுள்ள ஒரு மரக்கட்டையின் நிறை அதே ஒரு கன அடி அளவுள்ள ஜலத்தின் நிறையை விடக் குறைவாக இருக்கிறது. அதனால் மரம் ஜலத்தைவிட லேசானது என்று கூறுகிருேம். இதே போல் ஜலத்தைவிட லேசான வஸ்துக்கள் ஜலத்தில் அமிழாமல் மிதக்கும்: ஜலத்தைவிட இரும்பு கனமான வஸ்து, அதனால் அது ஜலத்தில் மிதக்காமல் அமிழ்ந்து விடுகிறது.

நம் உடம்பில் முக்கால் பாகம் ஜலம். பாக்கியுள்ள கால் பாகம் ஜலத்தைவிடக் கொஞ்சம் கனமானது. அதனால்தான் உடம்பு ஜலத்தில் அமிழ்ந்துவிடப் பார்க்கிறது. ஆயினும் நம் உடலிலுள்ள கொழுப்பு, ஜலத்தைவிட லேசாக இருப்பதாலும், சுவாசப் பைகளில் காற்று நிறைவதாலும் நமக்கு நீந்த முடிகிறது.

பாலஸ்தீன் நாட்டில் "மரணக் கடல்" என்னும் பெயருள்ள பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. அதன் ஜலம் கடல் ஜலத்தைவிட அதிக உப்பாய் இருக்கிறது. அதனால் அதில் யாரும் அமிழ்ந்து விட முடியாது. நாம் முயற்சி செய்யாமலே அதில் மிதக்கலாம்.

115 அப்பா! சப்தம் கேட்கிறதே, சப்தம் என்ருல் என்ன?

தம்பி! ஒவ்வொரு வஸ்துவும் அணுக்களால் ஆனதாகும்.

நாம் அதைத் தட்டினால் அதிலுள்ள அணுக்கள் அதிர்கின்றன. அதனால் அருகிலுள்ள காற்றின் அணுக்களும் அதிர ஆரம்பிக்கின்றன. அவற்றை அடுத்த அணுக்களும் அதிர்கின்றன. இவ்வித