பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

79

கரைபோய்ச் சேருவதைப் பார்த்திருப்பாய். அதேபோல் நாம் பேசினால் காற்றில் அலைகள் உண்டாகி காதில் வந்து சேருகின்றன. அப்பொழுதுதான் சப்தம் கேட்பதாகக் கூறுகிறோம். அதே மாதிரி வீட்டுக்குள் பேசும்பொழுது சப்த அலைகள் உண்டாகின்றன. அவை சுவரில் பட்டதும் அலைகள் சுவரில் உண்டாகின்றன. அந்த அலைகள் வெளியிலுள்ள காற்றில் அலைகளை உண்டாக்கிவிடுகின்றன, அந்த அலைகள் நம்முடைய காதுக்கு வந்து சேர்த்து வீட்டுக்குள் பேசியதைக் கேட்கும்படி செய்கின்றன.

ஆனல் வீட்டுக்குள் காற்றில் உண்டான அலைகள் சுவருக்கு மாறுவதால், சப்த அலைகளின் சக்தி குறைந்து விடுகிறது. அதனால்தான் வெளியே கேட்டாலும் தெளிவாய்க் கேட்பதில்லை, அந்தச் சுவரும் அதிகக கனமாய் இருந்து விட்டால் சப்தம் கேட்காமலே போகும். சுவருக்குப் பதிலாக ரோமமோ, மரத்தூளோ, துணித்திரைகளோ இருந்தாலும் அப்புடியேதான் சப்தம் கேட்காமல் போகும். அவற்றில் அலைகள் உண்டாகா. சப்தம் அவற்றோடு நின்றுவிடும்.

118 அப்பா! வெளியில் உட்கார்ந்து பேசுவதைவிட வீட்டுக்குள் உட்கார்ந்து பேசுவது உரக்கப் பேசுவதுபோல் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நீயும் நண்பரும் முற்றத்தில் உட்கார்நது பேசுகிறீர்கள். அப்பொழுது நண்பர் பேச ஆரம்பித்ததும், சப்த அலைகள் உண்டாகின்றன. கல்லை எடுத்து ஜலத்துக்குள் வீசினால் அலைகள் உண்டாகி நாலா பக்கங்களிலும் பரவுவதுபோல, சப்த அலைகளும் நாலா பக்கங்களிலும் பரவுகின்றன. அவைகளில் சில உன் காதுக்கு வந்து சேருகின்றன. பாக்கியுள்ள அலைகள் உன் காதுக்கு வராமல் போய் விடுகின்றன.