பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமயோசித புத்தி

வயல்கள் நிறைந்த சிற்றூரில்
வாழ்ந்து வந்தான், ஒருவணிகன்.

சரவணன் என்பது அவன்பெயராம்.
சரஸ்வதி என்பவள் அவன் மனைவி.

தந்தி ஒருநாள் புறப்படென
வந்தத னாலே வணிகனுமே

பட்டணம் செல்ல அன்றிரவே
பொட்டணத் துடனே புறப்பட்டான்

சரஸ்வதி மட்டும் தனியாகத்
தங்கி வீட்டில் இருந்தனளே.

நடுஇர வதனில் திருடர்களில்
நால்வர் வீட்டில் நுழைந்தனரே.

சத்தம் கேட்டுச் சரஸ்வதியும்
சத்தம் போட முற்பட்டாள்.

27