பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காக்கைகள் வாழ்க

எட்டு மணியும் அடித்தது.
இன்னும் தனது படுக்கையில்
குட்டி யப்பன் தூங்கினன்,
குறட்டை விட்டு அருமையாய்.

‘காகா, காகா!’ சத்தமோ
காதைத் துளைக்க லானது.
‘ஆஹா ஊஹூ!’ என்றவன்
ஆத்தி ரத்தில் விழித்தனன்.

கண்ணை விழித்துப் பார்க்கையில்
காகக் கூட்டம் ஒன்றினைக்
கண்டான், தன்னைச் சுற்றிலும்,
கடிக்க லானான், பற்களை.

‘தூக்கந் தன்னைக் கெடுக்கவா
துணிந்து வந்தீர்?’ என்றதும்,
காக்கை யாவும் ஒன்றுபோல்
‘காகா, காகா’ என்றன.

41