பக்கம்:குழந்தைப் பாட்டு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டிலே வில ஆட்டம் ஆடலாம் ; வெளியி லேயும் ஆட்டம் சில விரும்பி ஆடலாம். விட்டிலே உடற் பயிற்சி வேலையும் ஒர் ஆட்டமென்று விரைந்து செய்யலாம் ; பாட்டுப் பாடியே நாட்டி யங்களைப் பண்புடனே ஆடி ஆடிப் பழகிக் கொள்ளலாம். வீட்டை விட்டுமே வெளியிலே சென்று விறுவிறுப்பாய்ப் பந்தும் பிறவும் விரும்பி ஆடலாம்.

k ::: 米水 :::::

நொந்து வருத்திடும் நோய் உள்ள போது நோக நோக ஆடி அந்த நோயை வளர்க்காதே. தந்து துன்பத்தைத் தவிக்கப் தகுதி யில்லா ஆட்டங்களைத் தள்ளி நிக்குவாய். எந்த வயதிலும், எத்தொழில் செயினும் ஏற்ற நல்ல ஆட்டங்களை இனிக்க ஆடுவாய். தொந்தியைக் கரைத்துத் தோலின மினுக்கும் அந்த நல்ல ஆட்டம் ஆடி அழகு பெற்றிடுவாய். 5. எறும்பு (ஊக்கம்) 'நிலா நிலா ஒடிவா நில்லாமல் ஒடிவா’ என்ற மெட்டு 1. சின்ன சின்ன் ன்றும்பு ! சிங்கார எறும்பு ! உன்னேவிட ஊக்கத்தில் உயர்ந்த எறும்பு ! ஒயாமல் என்றும் உழைக்கும் எறும்பு ! з пшп цо6і) சென்று சாரையிடும் எறும்பு ! தண்ணிரைக் கண்டால் தவிக்கும் எறும்பு ! தொண்ணுறு வளைகள் தோண்டும் எறும்பு ! எங்கள் குழந்தாய் ! இந்த எறும்பு பொங்கு மகிழ்வுடன் போவதைக் காண்டாய். —8— எறும்பினைக் கண்டால் எப்போ தும்நீ குறும்பு செய்யாமல் கூர்ந்து கவனி ! ஒருசிறு எறும்பும் உன்னைப் போலச் சுறுசுறுப் பிழந்து சும்மா இராது. சிற்றெறும் பென்றும் கொட்டெறும் பென்றும் சிகப்பெறும் பென்றும் கறுப்பெறும் பென்றும் எத்தனை யோவகை எறும்புகள் உண்டு அத்தனை எறும்பும் அழகாய்ச் செல்லும்.

  • * எறும்பின் குணத்தை எங்கள் குழந்தாய் ! விரும்பிநீ கற்க வேண்டும் ; கேள் அது, சுறு கறுப்புடன் சூழ்ந்தே அபிசியை விறு விறுப்புடன் வேகமாய் இழுக்கும் இழுத்துச் சென்று இனிய தன் வளையில் அழுத்தி வைத்துப் பின் அடா மழையிலும் மனக்குறை யின்றி மகிழ்வாய்ச் சாப்பிடும் உனக்கும் அதுபோல் ஊக்கம் வேண்டும்.

来 米

  • 水水 米比

எறும்பின் குணந்தான் இன்னென் றுண்டு ; விரும்பிக் கற்க வேண்டும் நீ கண்டு. ஒன்றன் பின் ஒன்ருய் ஒற்றுமை கொண்டு சென்றுதம் இடத்தைச் சேர்வதும் உண்டு ; பலவும் சேர்ந்தே பண்டங்கள் தம்மைக் கலைவில் லாமல் கவ்வியே செல்லும். அந்தநல் ஒற்றுமை அன்பே ! உனக்கும் வந்துசேர் வதற்கு வழிசெய் வாயே. 藝! ఫ్రీ: