பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vii

நிறைய உண்டென்பதையும் கவிஞர் விளக்கி உள்ள முறையைக் கண்டுதான் துய்க்கவேண்டும், பேரூரில்,

“உணவு விடுதி பலஉண்டே!

உறங்கும் விடுதி பலஉண்டே!
உணவுக் காக எச்சிலையை
ஓர்ப்பாய்ப் பொறுக்கும் உயிர்உண்டே!"

எனக் கவிஞர் கூறியுள்ள இடத்தில், காசு உள்ளவர்கள் உணவு விடுதிகளில் உண்டு உறங்கி மகிழ்வார்களாக, எச்சிலைப் பொறுக்குதற்காக ஏமாந்து காத்து நிற்கும் மக்கள் சிலர் உள்ளார்களே என்ற இரக்கக் குறிப்புப்படக் கவிஞர் சொல்லியுள்ள விதத்தினை நினைத்து நினைத்து நான் மகிழ்கிறேன்.

சிறுவர்களுக்கு மெய்ப்பொருளாவது கல்வி என்பதும், பெரியோரைக் கண்டால் அவர்கள் 'வணக்கம்' எனச் சொல்ல வேண்டும் என்பதும், வழியில் ஒரமாய்ச் செல்ல வேண்டும் என்பதும், பள்ளிக்கு வேளைகடந்து செல்லக் கூடாது என்பதும், கற்றுத் தெளிவுபெற்று நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதும் எத்துணை இனிமையாகக் கவிஞரின் பாடல்களில் அமைந்துள்ளன!

தொட்ட தொட்ட இடத்தில் எல்லாம். தமிழ்மணம் நூலில் கமழக் காண்கிறேன் என்றாலும், "தாய்மொழியே தமிழ்" என்ற தலைப்பில் வரும் பாடல்களில் அத்தென்றல் வீசக் காண்கிறேன். தமிழ்மொழியினுடைய சிறப்புப் பண்புகள் எல்லாம் “தமிழ் மொழி” என்ற தலைப்பிலும், தமிழ்நாட்டின் சிறப்புக்கள் எல்லாம் “தமிழ்நாடே” என்ற தலைப்பிலும் அழகொழுக எழுதப்பட்டுள.

பள்ளிக்கூடத்திற் படிக்கும் சிறுவர்கள் வயதான பிற்பாடு பாரினை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள், பாரினை ஆள வேண்டியவர்கள், கல்வி பயிலுங்கால் படிப்பில் உன்னிப்பாக இல்லாதொழிந்தால், நாளை