இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழச் சிறுவர் பொற்புடையோர்!
தமிழப் பெண்கள் கற்புடையோர்!
தமிழ மறவர் விற்புடையோர் !
தமிழ வேந்தர் வெற்புடையோர் !
9
தமிழன் இயலோ அறிவாக்கம்!
தமிழன் இசையோ தேன்தேக்கம்!
தமிழன் கூத்தோ நல்லூக்கம்!
தமிழன் இலக்கியம் பெருநோக்கம்!
10
158 ♦ கவிஞர் வாணிதாசன்