பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒருகால் தூக்கி மன்றாடும்
ஒண்டொடி போல நடக்கின்றாய்!
அருகில் இருக்குது கறும்பூனை!
அதன்மேல் நினைவும் இருக்கட்டும்! 5

பாலும் பழமும் இருந்தாலும்,
பாவை மடிமேல் தவழ்ந்தாலும்
நாலு பக்கம் அடைப்பிருக்கும்
நங்கைக் கூண்டும் வீடாமோ? 6

வான வெளிதான் உன்அரசு!
மாமரக் காடே உன்வீடு!
ஏனல் கொல்லை உன்சொந்தம்
இருப்பும் வெறுப்பும் யாரறிவார்?7

பழுக்காப் பழமும் நீபார்த்தால்
பழுத்துப் போகும் அலகிட்டால்
கொழுத்த மாவிலை உன்வாலாம்!
கீரை வேரே உன்காலாம்! 8

மக்கள் போல நீபேசி
‘வா! வா!, 'போ! போ!’ என்றாலும்,
செக்கச் சிவந்த கோவையினும்
தீம்பால் பழமும் சிறப்பாமோ? 9


66 ♦ கவிஞர் வாணிதாசன்