பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெட்டை யோடு நடைந டந்து
வட்டச் சேவல் கூவுது!-புள்ளி
நெட்டைச் சேவல் கூவுது!
தட்டிக் கேட்க இல்லை என்றா
தலையை ஆட்டிக் கூவுது?-கொண்டைத்
தலையை ஆட்டிக் கூவுது? 4

சிறகைத் தட்டித் தலைநி மிர்த்தித்
தீரன் போலக் கூவுது!-தமிழ்
வீரன் போலக் கூவுது!
உறவை மாய்த்த பகையும் யாதோ?
ஊரும் கிழியக் கூவுது?-சிற்
றூரும் கிழியக் கூவுது ? 5

துள்ளிப் பாய்ந்து சிறகைத் தட்டிக்
குள்ளச் சேவல் கூவுது-பாதர்
வெள்ளைச் சேவல் கூவுது!
வெள்ளை எதிர்த்த வெள்ளை யன்போல்
வேற்றான் கண்டா கூவுது?-தமிழ்
மாற்றான் கண்டா கூவுது? 6



74 ♦ கவிஞர் வாணிதாசன்