பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38

பாக்கி டிப்பாள் பாட்டி!
பாய்மேல் காலை நீட்டி,
கையும் தலையும் ஆட்டி- 1

வெற்றிலை பாக்கை எடுப்பாள்;
சுண்ணாம்பு வைத்தும் மடிப்பாள்;
மெல்லக் கல்லால் இடிப்பாள்!2
 
இடித்த வெற்றிலை எடுப்பாள்
இட்டு வாயில் களிப்பாள்
எச்சில் துப்பித் துடைப்பாள்! 3

பல்லில் லாத வாயும்
பாக்கு வெற்றிலை மேயும்!
கல்லின் இடிப்பும் ஓயும்! 4


82 ♦ கவிஞர் வாணிதாசன்