பக்கம்:குழந்தை உலகம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு

5

 கிறார்கள். தாயென்றும் தங்தையென்றும் பிள்ளை யென்றும் பெண்ணென்றும் கொண்டாடும் உறவின் முறை நிரந்தரமானதன்று. யார் யாரோ? ஒருவருக்கு ஒருவர் திட்டமாக இன்ன உறவினர் என்று சொல்வது ஒரு பிறவியில் மாத்திரம் செல்லும். எப்போதும் செல்லாது. “ஆர் ஆரோ! ஆர் இராரோ! ஆர் இருப்பார்களோ!” என்று வியாக்கியானம் செய்வது உண்டு.

எப்படி ஆயினும், இந்த நாட்டின் சால்புக்கும் கொள்கைகளுக்கும் ஏற்ற நெறியிலே குழந்தைகளே வளர்ப்பதற்கு வழி வகுத்த பெரியார்கள், தாலாட்டுப் பாட்டு முதற்கொண்டே குழந்தையின் காதில் லட்சிய வாழ்க்கையின் செய்தி படவேண்டும் என்று நினைத்தார்கள் என்றுதான் தெரிகிறது. படித்த பெண்ணும் படிக்காத பெண்ணும் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடிக் கண் வளரச் செய்தார்கள். கூலி செய்து வயிறு வளர்க்கும் பெண்மணி தன் நிலைக்கு ஏற்றபடி மரக்கிளேயிலே கிழிந்த துணியினால் தூளி கட்டிக் குழங்தையை வளர்த்திப் பாட்டுப் பாடுகிறாள். அரண்மனேயிலே “மாணிக்கம் கட்டி, வயிரம் இடைக் கட்டி, ஆணிப் பொன்னார் செய்த வண்ணச் சிறு தொட்டி”லில் தன் குழந்தையைக் கிடத்தி அரசி தாலாட்டுப் பாடுகிறாள். அந்த இரண்டு காட்சிகளிலும் தூளியும், பொன்தொட்டிலும் குழந்தையின் தாக்கத் துக்கு அவசியம் அல்ல; அன்பு கனிந்த பெண்ணின் குரலிலே ஒலிக்கும் தாலாட்டுத்தான் அவசியம். கூலி வேலை செய்யும் பெண்ணுக்கு யார் தாலாட்டுப் பாட்டுச் சொல்லித் தந்தார்கள்? சமைக்கவும் புருஷனோடு சுகிக்கவும் பிள்ளை பெறவும் அவளுக்கு யார் சொல்லித் தந்தார்கள்? மீனுக்கு நீச்சம் வந்ததுபோல அவளுக்கு எல்லாம் வந்தன. தாலாட்டும் அப்படி வந்ததுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/14&oldid=1047111" இலிருந்து மீள்விக்கப்பட்டது