பக்கம்:குழந்தை உலகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய் செய்த தவம்

7



ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ! ஆரடித்து நீஅழwhய், அஞ்சனக்கண் மைகரைய ! மையும் கரைந்து மதிமுகம் வாடினhலே செய்யுமொரு காரியங்கள் தோணுமோ சித்தடியே !

இந்தக் குழந்தைக்காக அவள் எவ்வளவு காலம் காத்திருந்தாள் !“இத்தனை நாள் எங்கே இருந்தாய் ?” என்று குழந்தையையே கேட்கிறாள். குழந்தை பதில் சொல்கிறதாம் ! அந்தப் பதிலையும் தாயே தாலாட்டுப் பாட்டில் பாடுகிறாள்.

பூங்கிளியே பூங்கிளியே
இத்தனைநாள் எங்கிருந்தாய் ?
மாசி மறைந்திருந்தேன்
மகதேவர் பின் இருந்தேன்.
மகதேவர் பின் இருந்தேன்
மாஞ்சோலைக் குள்ளிருந்தேன்.
திங்கள் மறைந்திருந்தேன்
தேவர்கள் பின்இருந்தேன்
தேவர்கள் பின்இருந்தேன்
தேடியபோ திங்குவந்தேன்.

அவள் பலபல தவம் செய்து தேடினாள். செய்த தவத்தைச் சொல்லுகிறாள்

சித்தடியே சித்தடியே-நான்
செய்ததவம் நீகேளாய்
சித்தடியே நீபிறக்க-நான்
செய்ததவம் மெத்த உண்டு
அம்புலியை வேண்டி
அரையர் தமைவேண்டிச்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/16&oldid=1047121" இலிருந்து மீள்விக்கப்பட்டது