பக்கம்:குழந்தை உலகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய் செய்த தவம்

9

 அரசமரம் கட்டுச் சாலைகள் வைத்துச் சத்திரங் கட்டித் தவம் செய்தாள் ஒரு மாது. “விளக்கிலிட்ட வெண்ணெயைப்போல்” அவர்கள் உருகி நிற்கையில், “கலத்தில் இட்ட” சோற்றைப் போல அவர்கள் குழந்தைப் பசி போக்க அவன் பிறந்தானாம்.

அரசைப் பதிப்போமோ அதிகதவம் செய்வோமோ
சாலைகளை வைப்போமோ சத்கிரங்கள் கட்டுவமோ
கொழுந்தைப் பதிப்போமோ கோடிதவம் செய்வோமோ!
விளக்கிலிட்ட வெண்ணெயைப்போல் வெந்துருகி நிற்கையிலே ::கலத்திலிட்ட சோறதுபோல் கண்கலக்கந் தீர்த்தாயோ !

வேறு ஒருத்தி தான் செய்த வேறு தவ விரதங்களைச் சொல்கிறாள். .

ஆறிரண்டும் காவேரி அதன் நடுவே சீரங்கம்
சாமிரெண்டு கையாலே தந்தஎன்றன் திரவியமோ !
கங்கைபுளை ஸ்ரீநாதன் கருணையினால் என்வயிற்றில்
மங்களமாய் வந்துதித்த மணியேநீ கண்வளராய் !
சரியாய்த் தவந்தானம் தருமங்கள் செய்தாங்கள்
கலிதீர்க்க வந்துதித்த காதலனே கண்வளராய் !
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/18&oldid=1047186" இலிருந்து மீள்விக்கப்பட்டது