பக்கம்:குழந்தை உலகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

குழந்தை உலகம்


குழந்தை அகராதியில் முதல் வார்த்தை. அந்த வார்த்தைக்குப் பால் என்று அர்த்தம் கொள்வது தாயின் இயல்பு. “இங்கு கேட்கிற” குழந்தையைப் பார்த்துத் தாய்பாடுகிறாள்.

இங்கு கேட்கிற சங்கு
வார்த்தை கேட்கிற வண்டு
பேச்சு கேட்கிற பூச்சி
கார்த்திகை மாதத்து நிலாவோ!

குழந்தையை இரு கையும் சேர்த்துக் கொட்டும்படி சொல்வது ஒரு விளையாட்டு. இதை இலக்கியத்தில் சப்பாணி கொட்டுதல் என்பார்கள். பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியவகையில் குழந்தையைச் சப்பாணி கொட்டும்படி தாய் கேட்டுப் பாடுவதாக ஒரு பகுதி உண்டு. “சப்பாணிப் பருவம்” என்ற தலைப்பில் அந்தப் பாடல்களைக் காணலாம்.

இங்கே, உண்மை உலகத்தில், தாய் தன் சின்னப் பெண் குழந்தையைக் கைகொட்டச் சொல்கிறாள். இந்தத் தாயும் பாட்டுப் பாடித்தான் அவ்வாறு சொல்கிறாள்.

கொட்டடி கொட்டடி சின்னப்பெண்ணே
கோலவளைக் கையாலே
சேர்த்துக் கொட்டடி சின்னப்பெண்ணே
சிகப்புவளைக் கையாலே
பார்த்துக் கொட்டடி சின்னப்பெண்ணே
பச்சைவளைக் கையாலே
நீயே கொட்டடி சின்னப் பெண்ணே
நீலவளைக் கையாலே
தானே கொட்டடி சின்னப் பெண்ணே
தங்கவளைக் கையாலே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/33&oldid=1047403" இலிருந்து மீள்விக்கப்பட்டது