பக்கம்:குழந்தை உலகம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடலும் பாடலும்

25

 உருண்டையாக இருக்கும் விளையாட்டு வஸ்துவைக் குழந்தைக்கு முன்னலே ஆட்டி வேடிக்கை காட்டுவாள் தாய். அப்போது ஒரு பாட்டு வரும்.

பம்புக்கா பம்புலாலா
பம்புக்கா பம்புச்செடி
பம்புக்கா பம்புப் பழம்
பம்புக்கா பம்புக் கிச்சடி
பம்புக்கா பம்புலாலா !

தலையை வாரிப் பின்னும்போது தாய் பாட்டுப் பாடுகிறாள். பேனை அழைத்து “இந்த மகராஜன் தலையிலே வந்திறங்கு” என்று பாடுகிறாள். குழந்தையின் கவனத்தை இழுப்பதற்காக அவள் “பேனைப் பெருமா”ளாக்கிப் பாடுகிறாள்.

கொட்டுக் கொட்டுப் பேனே
கோடாலிப் பேனே
மத்து மத்துப் பேனே
மகராஜன் தலையில் வந்திறங்கு!

குழந்தை சோற்றால் வளர்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் பாட்டால் வளர்கிறது என்று சொல்லும்படி இருக்கின்றன, தமிழ் நாட்டில் வழங்கும் இத்தகைய பாடல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/34&oldid=1047406" இலிருந்து மீள்விக்கப்பட்டது