பக்கம்:குழந்தை உலகம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

குழந்தை உலகம்



பாவாடை கட்டும் பருவத்திலேயே வந்து விடுகிறது. அவளுக்கு ஒரு பாட்டு.

அடி பெண்ணே ராமக்கா
பையன் வரான் பார்த்துக்கோ
துட்டுத் தருவான் வாங்கிக்கோ
சுருக்குப் பையிலே போட்டுக்கோ
தட்டான் கையிலே கொடுத்துக்கோ
தாலி பண்ணிக் கட்டிக்கோ !

அகமுடையான் பெண்டாட்டி, கல்யாணம், தாலி என்ற விஷயங்கள் குழந்தை யுலக அகராதியில் கிழவிகளால் முதல் முதலில் புகுத்தப்படுவனவென்பது நமக்குத் தெரியும். யாராவது சிறு பையனும் சிறு பெண் குழந்தையும் இருந்தால், அகமுடையான் பெண்டாட்டி என்று சொல்லிப் பரிகாசம் செய்யும் வழக்கத்தை நம் நாட்டுக் கிராமத்தவர்கள் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்கத்திலிருந்து கனிந்தது இந்தப் பாட்டு.

***

தாளமும் ஒசையும் உடையனவாய்த் தொடர்ச்சியான பொருள் இல்லாத பாடல்கள் விளையாடும்போதும், சும்மா இருக்கும்போதும் குழந்தைகள் சொல்லுவன வாகப் பல உண்டு.

காக்க குஞ்சுக்குக் கல்யாணம்
காசுக்கு ரெண்டு ஒட்டுமஞ்சள்
தொட்டுக் குளிச்சால் செவந்திருக்கும்
தொரையைக் கண்டால் மணமணக்கும்
மாங்கு ளத்துக்குப் போனுள்
மயில் ஆடக் கண்டான்
அள்ளும் புள்ளும் சந்தனம்
அழகு மாலைத் தோரணம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/41&oldid=1047511" இலிருந்து மீள்விக்கப்பட்டது