பக்கம்:குழந்தை உலகம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைஉலகப் பாடல்கள்

зз



கொம்பு ரெண்டும் தம்பட்டம்
குதிரை மேலே ராவுத்தன்
வாழைத் தண்டை ரெண்டா வெட்டி
வடமலை அப்பனைப் பெண்ணா வெச்சுத்
தேர் மேலே ஏத்தி வெச்சு
வேடிக்கை பார்ப்பார் யார் ?

பாட்டானது தாளத்தோடு வரும்போது குழந்தைகள் தம்மை அறியாமலே ஆடுகின்றன. பாட்டை முடிக்கும் போது ஒரு குறிப்பிட்ட குழந்தையின் பெயரைச் சொல்லி, “இதோ இவன்தான்” என்று முடிக்கிறது வழக்கம்.

இதேபோல வேறு ஒரு பாட்டு உண்டு. அது சிறிய பாட்டு.

காக்கா குஞ்சுக்குக் கல்யாணம்
காவடி ஆட்டம் தேரோட்டம்
நாலு கரண்டி மண்எண்ணெய்
நாற்பத் தெட்டுத் தீவாளி
வாறார் போறார் சுப்பையர்
வழியை விலக்கடி மீனாட்சி.

குழந்தை உலகம் உயிருள்ளது, கட்டுக் கிடையானதல்ல, நாள்தோறும் வளர்ந்து வருவது என்பது அவ்வுலகப் பாடல்களில் புதிய பொருள்கள் ஏறுவதனாலே தெரிய வரும்.இந்தப் பாட்டில் மண்ணெண்ணெய் வந்திருக்கிறது.

வெறும் ஒலி மாத்திரம் இனிமையாக இசைந்த பாடல்களுக்குச் சில உதாரணங்கள் வருமாறு.

தங்க ரத்னம் தகரப் பெட்டி
நான் வளர்த்தது பூனைக் குட்டி.
*
ஆச்சியைப் பூச்சி கடிச்சுதாம்.
காசுக் காசாக் நடிச்சுதாம்
*
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/42&oldid=1047528" இலிருந்து மீள்விக்கப்பட்டது