பக்கம்:குழந்தை உலகம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

குழத்தை உலகம்


எப்பொழுது கல்யாணம் ?
தும்பி துளசி
தூக்கிப் போட்ட மம்முட்டி
கத்திரிக்காய் சுட்டு
காசுக்கு ரெண்டு
அந்திச் சோறு முந்திப் போச்சு
கொக்குக்கும் குருவிக்கும்
கோபால சாமிக்கும்
எப்போ கல்யாணம்?
நாளைக்குக் கல்யாணம்.
புதை புதைக்கிற செட்டிக்குப்
பொறக்க மாசம் கல்யாணம்
அப்படியாக் கொந்த செட்டிக்கு
ஆவணி மாசம் கல்யாணம்
இப்படியாக் கொந்த செட்டிக்கு
இந்த மாசம் கல்யாணம்!
தவளையின் வாழ்க்கை
பச்சைத் தவக்களை பச்சைத் தவக்களை
எத்தினியா நெல்லுக்கு வாழ்க்கைப்பட்டே?
ஒரா நெல்லுக்கு வாழ்க்கைப்பட்டேன்
ஒரா நெல்லு குத்தி எடுக்க
இடைச் சிறுக்கியைக் காணோமே
ஒரே நெல்லுக் குத்தி எடுத்து
ஒன்பது பேருக்கு ஆக்கிப் போட்டேன்!

உலகத்திலுள்ள ஜீவராசிகளெல்லாம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்கின்றதாகப் பாட்டுப் பாடும் குழந்தைக்குத் தானும் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளை குட்டியோடு வாழ வேண்டுமென்று தோன்றுவது இயல்புதானே? விளையாடும்பொழுதே அகமுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/45&oldid=1047655" இலிருந்து மீள்விக்கப்பட்டது