பக்கம்:குழந்தை உலகம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

குழந்தை உலகம்

 மேல் ehற்பது ஆண்டு வரையில் பேரிளம் பெண் என்று சொல்வர்.

இந்த ஏழு வகைப் பருவ மகளிரின் இயல்புகளையும் உலா என்னும் தமிழ்ப் பிரபந்தங்களில் புலவர்கள் மிக விரிவாகப் பாடி இருக்கிறார்கள். அந்த அந்தப் பருவத்திற்கு ஏற்ற அழகு, இயல்பு, செயல் ஆகியவற்றை அப்பிரபந்தங்களிலே காணலாம். ஒவ்வொரு பருவத்திலும் பெண்கள் விளையாடும் விளையாடல்களையும் புலவர்கள் வருணித்திருக்கிறார்கள்.

மேலே சொன்ன ஏழு பருவங்களிலும் பெதும்பைப் பருவப் பெண்ணை வருணிப்பது சிரமமான காரியமாம். “பேசும் உலாவிற் பெதும்பைபுலி” என்று ஒளவையார் பாடியிருக்கிறார். உலாப்பாடும் புலவர்கள் பெதும்பைப் பருவ வருணனை வந்துவிட்டால் புலியைக் கண்டவர் போலப் பயப்படுவார்களாம் ! ஆனால் வருணிக்காமல் விட்டவர்களேக் காணோம்.

காம உணர்ச்சியே இல்லாத பேதையைப்போலவும் அவள் உள்ளத்தியல்பு இராது ; காம வேட்கையை உடைய மங்கையின் மனப்பாங்கும் அவளிடம் இராது. இரண்டு பருவத்துக்கும் இடைப்பட்ட நிலை அவள் மன நிலை.

காளஹஸ்தி நாதர் உலாவில் ஒரு பெதும்பை வருகிறாள். சேறைக் கவிராச பிள்ளை என்ற வித்துவான் பாடியது அது. பெதும்பையின் சுபாவங்களை விரிவாக அவர் சொல்லியிருக்கிறார்.

அவள் தன் பருவத்துக்கு ஏற்ற அழகுடையவள். நன்றாக மலராமல், மலரும் பக்குவத்தில் உள்ள பேரரும்பைப் போல விளங்குகிறாள். பெண்கள் ரகசியமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/53&oldid=1048086" இலிருந்து மீள்விக்கப்பட்டது