பக்கம்:குழந்தை உலகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

காலத்தின் வாய்ப்பட்டு மடிந்தொழியும் செல்வங்கள் பல. பழங் காலத்தில் தமிழில் வழங்கிய நூல்கள் எவ்வளவோ மறைந்து போயின. எட்டுச் சுவடிகளில் நம் முன்னேர்கள் நூல்களே எழுதிப் பாதுகாத்தார்கள். அப்படியிருந்தும் பல அருமையான நூல்களை இழந்து விட்டோம். எழுதப் பெறாமல் வாய் மொழியாகவே வழங்கி வரும் நாடோடி இலக்கியப் பகுதிகளாகிய பாடல்கள், கதைகள், விடுகதைகள், பழமொழிகள் ஆகியவை நாளடைவில் மறைந்து வருவது வியப்பு அன்று. அவை அப்படி மறைந்து போக நாம் கையைக் கட்டி வாயை மூடிக்கொண்டிருக்கலாமா ? நம்மால் இயன்ற அளவு அவற்றைப் பாதுகாத்துப் போற்றுவது நம் கடமை. அச்சுயந்திரம் வந்த பிறகு பாதுகாக்கும் வேலை எளிதாகி விட்டது. பாடல்கள் முதலியவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி அச்சிட்டுப் பாதுகாத்தால் மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நாடோடிப் பாடல்களைத் தொகுக்கும் முயற்சியைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கிறேன். ஆறாயிரம் பாடல்களுக்குமேல் நான் சேர்த்திருக்கிறேன். அவற்றை அப்படியப்படியே வெளியிடுவதைவிட முதலில் அவற்றில் தமிழன்பர்களுக்குச் சுவை உண்டாகும்படி நல்ல முறையில் விளக்கம் அமைத்துப் பாட்டையும் காட்டினல் நலமாக இருக்கும் என்ற எண்ணத்தால் சுதேசிமித்திரன் வாரப் பதிப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளே எழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/6&oldid=1046867" இலிருந்து மீள்விக்கப்பட்டது