பக்கம்:குழந்தை உலகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11. வினா விடைச் சங்கிலி

குழந்தைகளின் பொழுது போக்காக வார்த்தைகளிலே எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன. மேல் காட்டில் வார்த்தைகளைக் கோத்தல் (Word Building) என்பது போல அந்த நாட்டுக்கு ஏற்ற விளை யாடல்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குப் பலவகைப் பொருள்களும் அவைகளுக்கு ஏற்ற வார்த்தைகளும் அடுக்கடுக்காகச் சொல்லும் பழக்கம் வருவதற்குச் சில வகை விளையாட்டு வினா விடைகள் இருக்கின்றன. ஒரு குழந்தை ஒரு கேள்வியைக் கேட்கும். அதற்கு மற்றொரு குழந்தை விடை அளிக்கும். அந்த விடையைக் கொண்டே கேள்வி கேட்ட குழந்தை மற்றொரு கேள்வியைக் கேட்கும். மறுபடியும் விடையும் வினாவும் சங்கிலி போலத் தொடர்ந்து கொண்டே போகும். கடைசியில் ஏதாவது அழகான வார்த்தையில் கொண்டு வந்து முடிப்பார்கள்.

இந்த வினா விடையில் எவ்வளவோ ஊர்கள், மரம் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், திண்பண்டங்கள் எல்லாம் வரும். வார்த்தைகளில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருக்குமே ஒழிய அர்த்தத்திலோ அல்லது சொல்லும் பொருள்களின் இயல்பிலோ ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் அநேகமாக இராது. இதோ ஒரு வினா விடை, நீ எங்கே “போனாய்?” என்று ஆரம்பித்து மயிலாப்பூர், ஆறுகாடு என்னும் ஊர்களுக்குப் போய்ப் பாலாற்றைத் தாண்டிக் காட்டு மயிலையும் மர நாயையும் பார்த்துவிட்டு இலைக்கள்ளி, அதன்பால், கற்பூர வாழை, அதன் இலை, மாம் பூ, வேர்ப்பலா, வெட்டிவேர் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/66&oldid=1048432" இலிருந்து மீள்விக்கப்பட்டது