பக்கம்:குழந்தை உலகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

 வந்தேன். வேறு சில பத்திரிகைகளிலும் அவ்வப்போது தனிக் கட்டுரைகளே எழுதியதுண்டு.

இப்போது நாடோடிப் பாடல்களை விரும்பிக் கேட்கிறவர்கள் அதிகமாக இருக்கின்றனர். ரேடியோக்களில் நாடோடிப் பாடல்களைப் பாட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களிலும் குழந்தைகளுக்கு அந்தப் பாடல்களைப் பயில்விக்கிறார்கள். ஆயினும் நல்ல முறையில் புத்தகங்கள் வரவில்லை. இதற்கு முன் “நாடோடி இலக்கியம்” , “கஞ்சியிலும் இன்பம்” என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன்; அவை நாடோடிப் பாடல்களின் விளக்கமாக உள்ளன. இது மூன்றாவது புத்தகம்.

இதில் குழந்தைகள் பிறந்து வளரும்போது தாய்மாரும் பிறரும் அவற்றை நோக்கிப் பாடும் பாடல்கள், குழந்தைகளே பாடும் பாடல்கள், அவர்கள் விளையாடுகையில் பாடும் பாடல்கள், அவர்கள் கேட்டு மகிழும் கதைகள் ஆகியவற்றையும் அவற்றின் விளக்கங்களையும் காணலாம். இனியும் இத்தகைய புத்தகங்கள் சிலவற்றை வெளியிடலாமென்று எண்ணுகிறேன். .

இப்புத்தகத்தில் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றில் “அஞ்சுவிரல் பாட்டு” என்பது ஊர்நிலத்தில் வந்தது; மற்றவை யாவும் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் வங்தவை.

நாடோடிப் பாடல்களைத் தொகுக்கும் திறத்தில் பலருடைய உதவி எனக்குக் கிடைத்திருக்கிறது. நானே பல இடங்களுக்குச் சென்று, தொழில் செய்யும் மக்களும் பிறரும் பாடும்போது கேட்டுத் தொகுக்தவை பல. எனக்காக வேறு அன்பர்கள் சிலர் நாடோடிப் பாடல்களைத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/7&oldid=1046871" இலிருந்து மீள்விக்கப்பட்டது