பக்கம்:குழந்தை உலகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 குழந்தை உலகம்

ஞானக் குறிப்பை அஞ்சு விரல்களினல் தட்சிணு மூர்த்தி காட்டினர். கர்மக் குறிப்பை, உலகத்தில் மனிதன் தாளாண்மையுடன் வாழ வேண்டும் என்ற குறிப்பை, இந்த அஞ்சு விரல்களும் காட்டுவதாக ஒரு நாடோடிப் பாவலன் சொல்கிருன். சின்னஞ் சிறு குழந்தைகள் வேடிக்கையாகப் பாடும்படி அந்தப் பாட்டு அமைந்திருக் கிறது. ஒவ்வொரு விரலும் ஒரு விஷயத்தைச் சொல்கிற தாம். குழந்தைகள் ஒவ்வொரு விரலேயும் தொட்டுக் காட்டிக்கொண்டே இந்தப் பாட்டைப் பாடுவார்கள். பாட்டை இனிப் பார்க்கலாம்.

கை விரல்களில் சிறியது சுண்டு விரல். அதற் கென்று தனி வேலே ஒன்றும் இல்லை. சின்னஞ் சிறு குழந்தையைப் போல இருக்கிறது. அது. குழந்தை பசி யென்ருல் வீரிட்டு அழும். அதை அடக்கிக்கொள்ளத் தெரியாது. இந்தச் சுண்டு விரலும் பசி என்று அழு கிறது: சோறு சோறு என்று பாக்கிறது.

சோறு சோறு என்குதாம்.

குழந்தை அழுதால் உடனே அதற்கு அடுத்த பெரிய குழந்தை அதை எடுத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்தும். குழந்தைக்குச் சோறு ஊட்டும் வழியைத் தேடும். தானும் சாப்பிட வகையை காடும். சுண்டு விரல் சோறு சோறு என்று அழுதபோது, அதற்கு அடுத்த மோதிர விரல் கவலை கொண்டது. ‘எப்படிச் சோறு கிடைக்கும்?” என்ற யோசித்தது. அதற்கு மேல் வகை தெரியாத பருவம உள்ளது அது. - - -

சோற்றுக் கென்ன செய்யலாம் ?

என்றதாம் அந்த மோதிர விரல். அதற்கு அடுத்தபடி பெரியது கடு விரல். அழுத குழந்தையைவிட, என்ன செய்யலாம் என்று கேட்ட குழந்தை பெரியது. அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/75&oldid=555192" இலிருந்து மீள்விக்கப்பட்டது