பக்கம்:குழந்தை உலகம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ፇፀ குழந்தை உலகம்

அதற்குப் பிறகும் கவிஞர்கள் கண்ணன் பிறப்பைக் காதலித்துப் பாடியிருக்கிருர்கள். பாரதியாரும் பாடியிருக் கிருர்.

கண்ணன் பிறந்தான்-எங்கள் கண்ணன் பிறந்தான்-இந்தக் காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும் திண்ணம் உடையான்-மணி வண்ணம் உடையான்-உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்.

அவன் தோன்றவே தேவர்களெல்லாம் வாழ்ந்தார் கள். 'பாவி அசுரர்கள், பொக்கென வீழ்ந்தார்.'

கவிஞர்கள் இவ்வாறு கண்ணன் பிறப்பைக் கொண் டாடுவது பெரிதல்ல. இங்காட்டு மக்களுக்கு ஒவ்வொரு வருஷமும் கண்ணன் பிறக்கிருன். ஒவ்வொரு வருஷமும் மக்கள் விழாவைக் கொண்டாடுகிருர்கள். கோகுலாஷ் டமி என்றும், ஜன்மாஷ்டமி என்றும், பூரீ ஜயந்தி என் றும் கண்ணன் திருகாளை இங்காட்டில் கொண்டாடுகிருர்

姆冢”。

ஆவணி மாதம் கோகுலாஷ்டமி குழந்தைகளுக்கு உற் சாகத்தை உண்டாக்கும் திருநாள். அன்று பல பலவித மான பகடிணங்கள் செய்து நிவேதனம் பண்ணுவது தமிழ்நாட்டு வழக்கம். பகடிணங்களுக்காகவாவது குழந் தைகள் கோகுலாஷ்டமியை ஞாபகம் வைத்துக்கொள் கின்றன.

கோகுலாஷ்டமி அன்றும் சிவராத்திரி அன்றும் இரவு கண் விழிப்பது ஒரு சம்பிரதாயம். பெரியவர்கள் பஜனை செய்தும், புராணங்கள் கேட்டும் கண் விழிப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/79&oldid=555196" இலிருந்து மீள்விக்கப்பட்டது