பக்கம்:குழந்தை உலகம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெர்சுவின் பெருமை 83

விளக்கை ஏற்றலுமே கொசுவனுர் வேடிக்கை பண்ணுவராம்.

இப்படிப் பாடிக்கொண்டிருக்கையிலே கொசு மனி தனே முழு ஞாபகத்தையும் அடையச் செய்துவிடுகிறது. 'ஏதடா, கம் புகழைப் பாடுகிருனே; கொஞ்ச நேரம் பொறுப்போம் என்று தெரிகிறதா அதற்கு? காதில் தன் யுத்த முழக்கத்தை முழக்குகிறது. மனிதன் தான் வாழும் உலகத்திற்கு வந்துவிடுகிருன். வருணனே யெல்லாம்போய் விடுகிறது. ஆத்திரக்தான் மீண்டும் உண்டாகிறது. சட் |

கள்ளப் பயல்கொசுவே - காதில்வந்து கசுகசு என்னுதே என்னைக் கடித்தக்கால் - கொசுவேஉன் பல்லேப் பிடுங்கிடுவேன்!

ஆமாம், எவ்வளவோ பேரல்லவா கொசுவின் பல் லேப் பிடுங்குகிறவர்கள்! இந்த வாய் வீரம் ஏதுக்கையா மனிதரே! கொசு ராஜ்யத்தில் நீர் வாழ்கிறீர். பேசாமல் அதன் முத்தத்தில் இன்பம் காணுவதை விட்டு விட்டுப் பல்லேப் பிடுங்குகிருராம், பல்லே! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/92&oldid=555209" இலிருந்து மீள்விக்கப்பட்டது