பக்கம்:குழந்தை உலகம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 குழந்தை உலகம்

கொஞ்ச தூரம் போன பிறகு எதிரே ஒட்டகம் ஒன்று தன் தலையை அசைத்து ஆட்டிக்கொண்டே வக் தது. அது பொரியரிசியைப் பார்த்து, 'வெள்ளே கிற அழகியே, பொரியரிசிப் பெண்ணே, எங்கே புறப்பட் டாய்?’ என்று கேட்டது.

"ஒட்டக மாமா, ஒட்டக மாமா, ஒரு மாப்பிள்ளே யைத் தேடிப் புறப்பட்டேன்’ என்று பொரியரிசி சொல் விற்று.

"அப்படியானல் நானே உன்னைக் கல்யாணம் பண் ணிைக்கொள்கிறேனே. என் முதுகில் நீ ஒய்யாரமாக ஊர் வலம் வரலாம்” என்று ஒட்டகம் சொல்லித் தன் உதட்டை அசைத்தது.

உடம்பெல்லாம் கோணல் மயமாக இருந்த ஒட்ட கத்தைப் பொரியரிசி ஒரு தடவை கிமிர்ந்து பார்த்தது. "ஐய! எத்தனே கோணல்! உன்னையும் ஒரு பெண் கல் யாணம் பண்ணிக்கொள்வாளோ !” என்று சொல்லி வெகு வேகமாக ஓடிப்போய்விட்டது.

கொஞ்ச தாரம் போன பிறகு எதிரே ஒரு கழுதை வந்தது. பொரியரிசியை அது பார்த்தது. ' உருண்டு திரண்ட பொரியரிசிப் பெண்ணே! ஊர்வலமாக எங்கே புறப்பட்டாய்?" என்று கேட்டது.

பொரியரிசி, "கழுதை மாமா, கழுதை மாமா, கண வசீனத் தேடிப் புறப்பட்டேன்’ என்றது.

"என்னைப் பார் என் வெள்ளி மூக்கைப் பார். உன் அழகுக்கும் என் அழகுக்கும் பொருத்தமாக இருக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளேன்” என்று சொல்லிக்கொண்ணுரம் போட்டுக் குதித்தது கழுதை. சங் தோஷத்தால் விலுக் விலுக்கென்று பின்னங்காலால் உதைத்துத் துள்ளியது. . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/95&oldid=555212" இலிருந்து மீள்விக்கப்பட்டது