பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருகூடசுந்தரம்

51

அப்பா :--அம்மா! அதற்குக் காரணம் சொல்லுகிறேன், கேள். இந்தப் பூவைப் பார்.

பாப்பா :--அப்பா! அது பூவரசம் பூ, எவ்வளவு அழகாயிருக்கிறது!: அதன் மஞ்சள் நிறம் எவ்வளவு பளபளப்பா யிருக்கிறது?

அப்பா :--ஆம், அம்மா! அதை மோந்து பார்.

பாப்பா :--அப்பா! அது ஒருவிதமான நல்ல வாசனையாக இருக்கிறது.

அப்பா :--அம்மா! சொல்லு. அதனுள்ளே என்ன இருக்கிறது சொல்லு.

பாப்பா: --அப்பா! நீ முன்னே காட்டினாயே, அந்த மாதிரி நடுவே கீலமும் அதன் மேலே கேசரங்களும் இருக்கின்றன. மஞ்சள் மஞ்சளாக மகரந்தப் பொடி சிதறிக்கிடக்கிறது. அது கீலத்தின் தலை மீது பட்டதும் உள்ளே நீண்டு சென்று அடியிலுள்ள முட்டையுடன் சேர்ந்து காயும் விதையும் ஆகிறது என்று சொன்னாய் அல்லவா, அப்பா!

அப்பா :- ஆம், அம்மா! ஆனால் இதைப்பார், இது என்ன சொல்லு பார்ப்போம்.

பாப்பா :--அப்பா! அது எனக்குத் தெரியும், அது பூவரச மொட்டு.

அப்பா:--அம்மா! இந்த மொட்டு விரிந்துதானே பூவாகிறது? இதன் நிறமும் மணமும் என்ன சொல்லு?