பக்கம்:குழந்தை செல்வம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


5. காக்காய்

காக்காய்! காக்காய்! பறந்து வா ;
கண்ணுக்கு மை கொண்டு வா. 1

கோழீ ! கோழீ! கூவி வா;
குழந்தைக்கு பூக் கொண்டு வா. 2

வெள்ளைப் பசுவே ! விரைந்து வா ;
பிள்ளைக்குப் பால் கொண்டு வா. 3

6. கோழி

சேவற் கோழி

கோழீ ! கோழீ! வா வா;
      கொக்கோ கோ என்று வா ;
கோழீ ! ஓடி வா வா ;
      கொண்டைப் பூவைக் காட்டு வா. 1

குத்திச் சண்டை செய்யவோ?
      குப்பை கிண்டி மேயவோ?
கத்திபோல் உன் கால்விரல்
      கடவுள் தந்து விட்டனர்! 2

காலை கூவி எங்களைக்
      கட்டில் விட்டெழுப்புவாய்;
வேலை செய்ய ஏவுவாய்;
      வெற்றி கொண்ட கோழியே! 3