இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
குழந்தைச் செல்வம்
பெட்டைக் கோழி
கோழீ ! கோழீ ! வா வா:
கூரை விட்டு இறங்கி வா;
கோழீ! முட்டை இட வா:
கூட்டில் அடை காக்க வா.
4
பெட்டைக் கோழீ! வா வா;
பிள்ளைகளைக் கூட்டி வா!
குட்டை நெல்லைக் கொட்டினேன்;
கொத்திக் கொத்தித் தின்ன வா.
5
வஞ்சமாய்ப் பருந்ததோ
வானில் வட்டம் போடுது;
குஞ்சணைத்துக் காப்பாயோ?
கூட்டில் கொண்டு சேர்ப்பாயோ?
6
7. நாய்
வீட்டு வாசல் காப்பவன்,
வேட்டை யாட வல்லவன்,
ஆட்டுக் கிடைப் பாண்டியன்,
அன்பு மிக்க தோழன்.
1
உண்ட சோற்றை எண்ணி
உயிரும் விடத் துணிபவன்.
மண்டலத்தில் நாய்போல்
வாய்த்த துணை உண்டோ?
2