இயற்கை இன்பம்
17. இயற்கை
வானம் கறுத்தால் மழை பெய்யும்,
மழை பெய்தால் மண் குளிரும்;
மண் குளிர்ந்தால் புல் தழைக்கும்,
புல் தழைத்தால் பசு மேயும்;
பசு மேய்ந்தால் பால் சுரக்கும்.
பால் சுரந்தால் கன்று குடிக்கும்;
கன்று குடித்து மிஞ்சியதைக்
கறந்து கொண்டு வந்திடலாம்;
காப்பியில் விட்டுக் குடித்திடலாம்.
18. வசந்தம்
மின்னி மேகம் பரவுது ;
மெல்ல மெல்லத் துளிக்குது;
என்ன சொல்லித் துளிக்குதென்று
இயம்பு கின்றேன், கேளம்மா!
1
‘மண்ணில் கொஞ்ச நாட்களாய்
மறைந்து றங்கும் செடிகளே!
கண் மலர்ந்து வாருங்கள்;
காலை யாச்சு‘ தென்குது.
2
‘பட்டுடுத்து வாருங்கள்;
பணிகள் பூண்டு வாருங்கள்;
பொட்ட ணிந்து சீக்கிரம்
புறப்படுங்கள்‘ என்குது.
3
‘வாசச் செப்பைத் திறவுங்கள்:
வாரி யெங்கும் வீசுங்கள்
ஈசன் பாத பூசனைக்கு
எழுந்திருங்கள்’ என்குது.
4