32
குழந்தைச் செல்வம்
அம்புலி நட்சத் திரங்களுண்டு - கணக்கு
ஆக்கி யறிய வழிகளுண்டு;
இன்பமே! நேரம் இரவில் அறிந்திட
இன்னும் கடிகாரம் வேண்டுமோடி?
6
கம்மென வாசம் கமழ்பாகி சாதம் - இக்
காவில் மலர்ந்து சொரிவதுண்டு;
அம்மையே! நள்ளிர வீதென்று சொல்லிட
ஆர்க்கும் கடிகாரம் வேண்டுமோடி?
7
காலை மாலை எந்த வேளையும் - சூரிய
காந்தி மலர்தானே காட்டிடாதோ?
வேலை யெழுந்த திருவே! உனக்கினி
மேலும் கடிகாரம் வேண்டுமோடி?
8
சுற்றுப் பொருளெல்லாம் உற்று நோக்கி - அவை
சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்!
பெற்ற முத்தே! இந்த உண்மை அறிவோர்க்குப்
பின்னும் கடிகாரம் வேண்டுமோடி?
9
29. ஸைக்கிள்
தங்கையே, பார்! தங்கையே, பார்!
ஸைக்கிள் வண்டி இதுவே பார்!
1
சிங்கார மான வண்டி,
சீமையிலே செய்த வண்டி.
2
இரும்பாலே செய்த வண்டி,
எங்கெங்கும் ஓடும் வண்டி.
3
மாடில்லை, குதிரை யில்லை,
மாயமதாய்ப் பறந்திடும், பார்!
4