பக்கம்:குழந்தை செல்வம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

குழந்தைச் செல்வம்


தீவினை செய்ய - என்னைத்
      தினமும் ஏவுகிறார்;
பூவுலக மெல்லாம் - சுட்டுப்
      பொசுக்கச் சொல்லுகிறார். 5

அன்பைக் கொன்றுவிட்டார்; - மனிதர்
      அரக்கர் ஆகிவிட்டார்;
துன்பம் செய்திடவே - இன்று
      துணிந் திறங்கிவிட்டார்.

ஆசைப் பேயெங்கும் - தலைவிரித்து
     ஆடு கின்றதையோ !
நாச காலம் ஐயோ!-புவியும்
     நரக மாகுதையோ! 7

காட்டில் ஓநாயும் - நரியும்
     கடுவாயும் புலியும்
நாட்டு நாகரிகம் - கண்டு
     நகைக்க லாச்சுதையோ! 8

சாந்த மூர்த்தியின்[1] - அகிம்சா
     தருமம் மேற்கொண்டு
மாந்தர் இவ்வுலகில் - நன்றாய்
     வாழ்வ தெந்நாளோ? 9

31. சுசீந்திரம்

ஆற்றங் கரையுண்டு,
அழகான சோலையுண்டு;
நந்த வனமுண்டு,
நன்செய்கள் சூழவுண்டு;
சத்திரங்கள் உண்டு,
தமிழ்க் கல்விச் சாலையுண்டு;
தெப்பக் குளமுண்டு,
தேரோடும் வீதியுண்டு;


  1. 9. சாந்த மூர்த்தி - காந்தி யடிகள்.