பக்கம்:குழந்தை செல்வம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சாமிர்தம்

55


அகில் விறகை மாட்டி
     அடுப்பில் எரி மூட்டி,
பகவன் அடி போற்றிப்
     பானையேற்றி வைப்போம். 7

தங்கத்தினால் பானை,
     தரளம் என அரிசி.
பொங்கலும்பால் பொங்கல்,
     புத்தமுதப் பொங்கல்! 8

பானையுமே பொங்கிப்
     பால்வடியும் வேளை,
வானம்எழக் குரவை
     வழங்கிவலம் வருவோம். 9

கடவுட்கமு தளிப்போம்;
     காகத்துக்கும் இடுவோம்.
உடனிருந்தெல் லோரும்
     உண்டுமகிழ்ந் திடுவோம். 10

49. தீபாவளிப் பண்டிகை

 
             தொழிலாளி பாட்டு
பண்டிகை தீபாவளிப் பண்டிகையாம் - இந்தப்
     பாரத நாட்டுக்கோர் பண்டிகையாம்;
தண்டிகை மன்னவர், ஏழை எளியவர்,
     சந்தோஷம் கொண்டாடும் பண்டிகையாம். 1

ஆண்டிலோர் தீபா வளியாம், அடா! - அதை
     ஆண்டியும் கொண்டாட வேண்டும்.அடா!
தீண்டு துயர்போகும் நாள் இதடா!-உள்ளம்
     தேடித் தவித்திடும் நாள் இதடா!