இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மழலை மொழி
1. முத்தந் தா
கண்ணே! மணியே! முத்தந் தா,
கட்டிக் கரும்பே! முத்தந் தா ;
வண்ணக் கிளியே! முத்தந் தா,
வாசக் கொழுந்தே! முத்தந் தா.
1
தேனே! பாலே! முத்தந் தா,
தெவிட்டாக் கனியே! முத்தந் தா ;
மானே! மயிலே! முத்தந் தா,
மடியில் வந்து முத்தந் தா.
2
2. தாலாட்டு
ஆராரோ? ஆராரோ?
ஆரிவரோ? ஆராரோ?
1
மாமணியோ? முத்தோ?
மரகதமோ? மன்னவர்தம்
தாம முடிமீது
தயங்கும் வயிரமதோ?
2
முல்லை நறுமலரோ?
முருகவிழ்க்குந் தாமரையோ?
மல்லிகைப் பூவோ?
மருக்கொழுந்தோ? சண்பகமோ?
3