பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8. பயப்படுத்தலாமா

ஒரு நாள் நான் ரெயிலிலே பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். ஒருவர் தம் குடும்பத்தோடு அதே வண்டியில் வந்தார். அவருடைய சின்னக் குழந்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. "ஐயோ! வேண்டாம். கீழே விழுந்துவிடுவாய்! வெளியே பார்க்கப்படாது" என்று குழந்தையின் பாட்டி பயங்காட்டி எச்சரிக்கை செய்தாள். அதனால் கொஞ்ச நேரம் குழந்தை பேசாதிருந்தது. பிறகு மறுபடியும் அது தலையை நீட்ட யத்தனித்தது. "ஐயோ, குழந்தை போச்சு" என்று தாய் வீறிட்டுக் கத்தினுள். "இன்னும் கொஞ்ச நேரம் பார்க்காமலிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?" என்று பாட்டி அலறினாள். அவள் அதோடு நிற்கவில்லை. குழந்தையை மிரட்டி வைப்பதற்கு ஒரு புதிய வழியையும் கண்டு பிடித்தாள். எதிர்ப் பக்கத்திலே உட்கார்ந்திருந்த ஒருவரைக் காண்பித்து, "உஸ், அதோ பார், அவர் உன்னைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார் - பேசாமல் என் மடிமேல் வந்துவிடு” என்று சொன்னாள். அந்த ஆசாமியும் பாட்டிக்குத் துணேயாக வந்துவிட்டார். “டேய் - பேசாமே உட்கார். இல்லாத போனல் இந்தப்பைக்குள்ளே பிடித்துப் போட்டுக்கொண்டு போய்விடுவேன்" என்று சத்தம் போட்டார். கண்ணைத் திரு திருவென்று விழித்தார். குழந்தை பயந்து அரண்டுபோய்விட்டது. பேசாமல் பாட்டியின் மடியில் அமர்ந்துகொண்டது.

பாட்டியின் தந்திரம் பலித்துவிட்டது. ஆனால் அதனால் குழந்தைக்கு எவ்வளவு தீங்கு விளைகிறதென்பதை அவள் உணருவதில்லை. இந்தச் சம்பவத்தைக் கண்ணுற்ற எனக்கு மனத்திலே அதிக வேதனை யுண்டாயிற்று. எதிர்

கு-4