பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

முதலில் சித்திரத்தைக் கெடுத்தது; பிறகு ஒரே அடியாக அதை விழுங்கிவிட்டது” என்று ஒரு மனத்தத்துவர் கூறுகிறார்.

பேசும் மொழி வளராத ஆதிக் காலத்தில் மனிதன் தனது உணர்ச்சிகளைச் சித்திரங்களின் மூலமாகவே வெளியிட்டான். கண்டு பிடிக்கப்பட்டுள்ள குகைச் சித்திரங்கள் இதற்குச் சானறாக உள்ளன. அந்த ஆதி மனிதனுடைய நிலையில் குழந்தை இருக்கிறது.

மூன்று வயதுக் குழந்தையிடம் ஒரு சுண்ணும்புக் கட்டியைக் கொடுத்து விட்டால் அது உடனே என்னவோ வரைய ஆரம்பித்து விடுகிறது. ஐந்து வயது, எட்டு வயது, பத்து வயதுச் சிறுவர் சிறுமிகளுக்கு நல்ல வர்ணங்கள் கிடைத்து விட்டால் ஒரே உற்சாகத்தான்.

நான்கு ஐந்து வயதான பிறகும் குழந்தை தன் உணர்ச்சிகளைப் படங்களின் மூலமாகத்தான் நன்முக வெளிப்படுத்துகிறது. அதன் கற்பன சக்தி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அவர்கள் வரையும் படங்கள் மூலமாகத்தான் நன்கு அறிந்து கொள்ள முடியும். ஆனால் குழந்தைச் சித்திரமே ஒரு தனிப்பட்ட பாஷை, அதைப் புரிந்து கொள்ளுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும்.

அடுத்த பக்கத்திலே பூஞ்செடியின் படம் ஒன்று இருக்கிறது. ஏழு வயதுள்ள சிறுவன் வரைந்தது அது. "செடியை விடப் பூப் பெரிதாக இருக்கிறதே?' என்று கேட்டு நீங்கள் சிரிக்கலாம். ஆனால் பூவைப் பெரிதாக வரைந்திருப்பதன் பொருள் வேறு. அந்தச் செடியில் நிறையப் பூக்கள் இருக்கின்றனவாம். பூமயமாகச் செடி விளங்குவதைக் கண்டு அந்தப் பூவையே பிரதானமாகக் காட்டிச் சிறுவன் படம் திட்டியிருக்கிறான் ஒரு மரத்திலே