பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

வயதில் ஒத்த குழந்தைகளின் சேர்க்கையில்லாததால், பல தீங்குகள் விளைய இடமேற்படுகிறது. கூர்ந்த அறிவுள்ள குழந்தைகள் தாமே ஒரு கற்பனே உலகத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு அதில் தமது காலத்தைக் கழிக்கத் தொடங்கும். கற்பனை செய்வது எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்புதான். அதனால் தீங்கில்லை. ஆனால், அவை வெறுங் கற்பனைகள்தான் என்ற உணர்வு அவ்வப்போது ஏற்படவேண்டும். உண்மை இது, கற்பனே இது என்று பிரித்தறியக் குழந்தைக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்சி வேண்டும்.

கற்பனையிலே-அதிலும் ஒற்றைக் குழந்தையின் கற்பனை உலகத்திலே-அக் குழந்தைதான் நடு நாயகமாக விளங்கும் தலைவன்; அது வைத்ததே சட்டம், அதற்கு மாறு சொல்ல யாருமில்லை-இவ்வாறு கற்பனை செய்து கொண்டு வளர்ந்த குழந்தை பிறரோடு பழகநேரும்போதும், வாழ்க்கையில் சேர்ந்து வேலை செய்யும்போதும் தன்னிஷ்டப் படியே எல்லாம் நடக்க வேண்டுமென விரும்புகிறது. அது நடக்குமா? அந்தக் குழந்தைக்கு மற்றவர்களை அநுசரித்து கடக்கத் தெரிகிறதில்லை. அதனால் மனத்தாங்கல்களும் சச்சரவுகளும் விளைகின்றன. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் பல சமயங்களில் தடை ஏற்படுகிறது.

மற்றவர்களைச் சமமாகப் பாவித்து வாழ ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொள்ளவேண்டும். வீட்டிலே பல குழந்தைகள் இருந்தால் இப்படிப்பினே தானாகவே ஏற்பட்டுவிடுகிறது. ஒற்றைக் குழந்தைக்கு இந்த வாய்ப்பில்லை. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் சாதாரணமாக முதல் இரண்டு வருஷங்களுக்குப் பெற்றோர்களின் விசேஷக் கவனம் கிடைக்கிறது. ஆனால், ஒற்றைக் குழங்தைகளுக்குப் பல வருடங்களுக்கு அது கிடைக்கும். அதற்கு வேண்டியதெல்லாம் பெற்றோர்கள் செய்வார்கள். அதனால்