பக்கம்:குவலயானந்தம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'என்னுரை' ஆண்டுதோறும் அனைத்து இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற கருத்தரங்கின் போது ஒரு இலக்கணநூல் வெளியிட வேண்டும் எனும் எண்ணிம் தோன்றியது. அதனைச் செயற்படுத்தும் வகையில் 1977இல் மதுரைக் கருத்தரங்கில் வீர சோழியம் - மூலமும் திறனாய்வும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1978இல் கோவைக் கருத்தரங்கில் தொன்னூல் விளக்கம் வெளிப் போந்தது. 1979 இல் வெளிவராத, வெளிவந்து பலரும் அறியாத நூல்களான குவலயானந்தம், 1, 2, சந்திராலோகம் எனும் அணி இலக்கண நூல்களை வெளிக் கொணரும் வாய்ப்பினை ஐதரா பாத் கருத்தரங்கம் நல்கியது குறித்துப் பெருமகிழ்ச்சி அடை கிறேன். நூலின் முன்பகுதியில் தமிழ் அணியிலக்கணம் பற்றிய பொது அறிமுகமும், பதிப்பித்துள்ள முந்நூல்களின் அறிமுகமும் அமைத் துள்ளன. பின் பகுதியில் நூல்களின் மூலமும், தேவையான இடங் கனில் சிறு விளக்கமும் அமைந்துள்ளன. பின் இணைப்பாக அணி யிலக்கணம் பற்றிய அட்டவணைகள் இரண்டும். நூற்பா முதற் குறிப்பகராதி, மேற்கோள் குறிப்பகராதி, சொல்லகராதி, ஆகியனவும் அமைந்துள்ளன. பலருக்கும் கிடைக்காத தமிழ் இலக்கண நூல்களைக் குறைந்த விலையில் மக்கள் பதிப்பாகக் கிடைக்கச் செய்தல் வேண் டும் என்பதே அடிப்படை நோக்கம். இந்நோக்க நிறைவேற்றத் திற்குத் தங்கள் நூல்நிலைய ஏட்டுப் பிரதியை வழங்கி உறுதுணை புரித்த டாக்டர். உ. வே. சாமிநாதையர் நூல்நிலையத் தார்க்கு என்னுடைய மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேண்டிய உதவியை நல்கிய எனது மாணாக்கி செல்வி. ச. சிவகாமிக்கும், அச்சுப் பிரதிகளை ஒப்பு நோக்கி, அகராதிகளையும் தயாரித்துத் தந்த செல்வி. இல. சாரதாவுக்கும் எனது ஆசியையும், குறுகிய கால எல்லையில் சிறப்பாக அச்சிட்டுத் தந்த 'நாவல் ஆர்ட்" அச்சசு உரிமையாளர் திரு. நாரா. நாச்சியப் பன் அவர்கட்கு என்னுடைய அன்பு கலந்த நன்றியையும் தெரிவித் துக் கொள்கிறேன். ஐதராபாத் 23-6-79 அன்பன், ச. வே. சுப்பிரமணியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குவலயானந்தம்.pdf/4&oldid=1498486" இலிருந்து மீள்விக்கப்பட்டது