பக்கம்:குவலயானந்தம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4 குவலயானந்தம்....... ஆயின் இளம்பூரணர் உளிமை இயலின் முன்னுரையில் (இதனால் பயன் என்னை மதிப்பதோ எனின், புலன் அல்லாதன புலன் ஆதலும் அலங்காரமாகிக்கேட்டார்க்கு இன்பம்பயத்தலும், அஃதாவது மேற்சொல்லப்பட்ட எழுதிணையினும் யாதனுள் அடங்கும் எனின் அவை 'எல்லாவற்றிற்கும் பொதுவாகிப் பெரும் பான்மையும் அகப்பொருள் பற்றி வரும் என்றுகூறுகிறார். இதனை நோக்குங்கால், இலக்கியத்தின் பொருள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கிய முன்னோர் அதன் புலப்பாட்டு முறை, வெளியீட்டு முறை ஆகியவுற்றையும் எண்ணத் தொடங்கி னர். அதன் விளைவாக உவமை போன்றவற்றை அணியாகக் கொள்ளத் தலைப்பட்டனர் எனலாம். இந்நிலை இளம்பூரணர் காலத்ததாக இருக்கலாம். முழுமையாக அறுதியிடப்படாத தொன்றில் கருத்து வேறுபாடு இருத்தல் இயல்பு. இதனையே இளம்பூரணர்,பேராசிரியரிடம் காண்கிறோம். புலன் அல்லாதன புலன் ஆதலும், அலங்காரமாகிக் கேட் டார்க்கு இன்பம் பயத்தலும் எனும் இளம்பூரணர் கருத்தும், கவிதையுடன் இரண்டறக் கலந்து அமைய வேண்டும் எனும் பேராசிரியரின் உவமம் பற்றிய எண்ணமும் இணைந்ததே அணி என்ற சிறப்பிற்குரியதாக நாம் கொள்ளலாம். இங்ஙனம் அணி என்பதன் வித்தும் தொல்காப்பியத்தில் விதைக்கப்பட்டி ருக்கின்றது. இதுதனியொரு இலக்கணமாகத்தளிர்த்ததை டாக்டர் மு.வ. தெளிவாக உணர்த்தி உள்ளார். கவைஞர் தம் உணர்ச்சியையும் கற்பனையையும் உணர்த்துதல்போல் தம்கலைத்திறனை வெளியீ படையாகக் காட்டுதல் இல்லை. கலைத்திறனை கலைப்பயனை மட்டும் நல்குவர் அவர், ஆயின், மறைத்துக் ஆராய்ச்சி யாளரோ மறைந்துள்ள கலைத்திறனை ஆய்ந்து காணுதலையே கடமையாகக் கொள்பவர். அவ்வாறு ஆராயும்போது காணப்பட்ட சிலவகைத் திறங்களுக்குப் பெயரும் இலக்கணமும்வகுக்க முற்பட் டனர்: சிலவகைத் திறங்கள் அவர்களின் ஆராய்ச்சிக்கு எட்டாமல் நின்ற போதிலும் அவற்றிற்கும் பெயரும் இலக்கணமும் வகுக்க மூயன்றனர். அந்த முயற்சியின் பயனாக ஏற்பட்டதே அணி இலக் கணம் எனப்படுவது.5 உவமையே பல்வகை அணிகளின் தோற்றத்திற்கும் காரணம் ஆகின்றது.வடமொழியாளரும் இக்கூற்றுக்கு உடன்படுகின்றனர். அப்பைய தீட்சதர் என்பார் சித்ர மீமாம்சை எனும் கிரந்தத்தில் இதனை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன் மொழிபெயர்ப்பு: 5. இலக்கியத்திறன், டாக்டர், மு.வ.பும்.231

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குவலயானந்தம்.pdf/9&oldid=1498511" இலிருந்து மீள்விக்கப்பட்டது