பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

115


நின்று பந்தைப் பிடித்துக் கொண்டு, 5-ம் குழுவில் கடைசி ஆட்டக் காரருக்கு முன் னால் உட்கார்ந்திருப்பவருக்கு எறிய, அவர் எழுந்து நின்று பந்தைப் பிடித்துக்கொண்டு, நிற்க, இப்படியாக எந்தக் குழு ஒருமுறை பந்தைப் பிடித்து உட்கார்ந்து, மீண்டும் ஒரு முறை பந்தைப் பிடித்து எழுந்து நிற்கிறதோ, அந்தக்குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: பிடிக்கும் பொழுது பந்தைத் தவற விடுபவரே ஓடிப்போய் பந்தை எடுத்து வரவேண்டும். எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைத்து, முதலில் வந்தால்தான் போட்டியில் ஒரு முழு வெற்றி பெறமுடியும்.


89. பாம்புச் சட்டை

பாம்பு சட்டை உரிக்கிறது என் பார்களே, அதுபோன்ற ஆட்டம் இது.

குழுக்கள் ஓடத் தொடங்கும் கோட்டின் பக்கத்தில் முதலில் நிற்க வேண்டும்.

குழுவின் முதலாட்டக்காரர் அப்படியே மல்லாந்து காலிரண்டும் கோட்டில் இருக்குமாறு தரையில் படுக்க, அடுத்து நிற்பவர் நகர்ந்து, தமது கால்களுக்கிடையில் முன்னவர் தலை இருக்குமாறும் கால்களால் அவர் உடலை இருபுறமும் அணைத்திருப்பது போலவும் மல்லாந்து படுத்து, தனது இடது கையால் முன்னே படுத்திருப்பவரின் இடது கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.