பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மூன்றாமவரும் அவ்வாறு மல்லாந்து முன் விளங்கியவாறு படுத்து, தனது வலது கையால் இரண்டாமவரின் வலது கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு குழுவினர் அனைவரும், ஒருவர் கையை ஒருவர் மாற்றிப் பிடித்துக் கொண்டு, மல்லாந்து படுத்திருக்க வேண்டும்.

போட்டி ஆரம்பித்த உடனேயே, குழுவின் கடைசியில் படுத்திருப்பவர் எழுந்து முன்னால் படுத்திருப்பவரின் கைய்ை விட்டுவிடாமல், எழுந்து கால்களை அகலமாக்கியவாறு, தாண்டி அவரைக் கடந்துவர, அடுத்தவரும் எழுந்து, பிடியை விடாமல் தொடர்ந்து தாண்டிவர, இப்படியாக எல்லோரும் கால்களுக்கிடையிலே கைகள் இருக்குமாறு பிடித்துப் பிணைத்துக்கொண்டு, முன்னே குறிப்பிட்டிருக்கும் முடிவெல்லைக் கோட்டை நோக்கி ஓடவேண்டும்.

குறிப்பு: முதலில் ஓடிச் சென்ற குழுவே வெற்றிபெறும். என்றாலும், கைகளின் பிணைப்பை யாரும் விட்டுவிடக் கூடாது, இணைப்பை நீக்கி ஓடிவரும் குழு நீக்கப்பட்டுவிடும்.


90. அலையோட்டம்


குழுவுக்கு 6 பேர் என்று ஆட்டக்காரர்களைப் பிரித்துக் கொள்ளலாம். (இட வசதிக்கேற்பவும், ஆடும் திறமைக் கேற்பவும் எண்ணிக்கை மாறலாம்).