பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

11



I. பந்தோடு விளையாட்டுக்கள்


1. மேலாளரும் மெய்க்காப்பாளரும்

அமைப்பு:

விளையாட்டில் கலந்து கொள்ள வந்திருப்போர் அனைவரும் (குறைந்தது 30 பேரிலிருந்து 40 பேர்கள் வரை இருந்து ஆடுவது சிறந்தது) வட்டமாகக் கைகோர்த்து முதலில் நின்று, பிறகு கைகளை விடுவித்துக் கொண்டு, தனித்தனியாக அவரவர் இடத்தில் நின்று கொண்டிருக்க வேண்டும். வட்டத்தின் மத்தியில் ஒரு முக்காலியோ அல்லது ஒரு நாற்காலி போன்ற உயர்ந்த பகுதியோ வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வைக்கப்பட்டிருக்கும் முக்காலி அல்லது உயர்ந்த இடத்தில் ஒருவரை ஏற்றி நிறுத்த வேண்டும். மேலே நிற்கும் அவருக்கு ஒரு மெய்க் காப்பாளர், அவரின் பக்கத்தில் தரையில் நின்று கொண்டிருக்க வேண்டும். வட்டத்தில் நிற்பவர் ஒருவரின் கையில் பந்திருக்கும்.

ஆட்டத்தின் நோக்கம்:

வட்டத்தில் நிற்பவர்களின் நோக்கமானது,